சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து, - மக்கள் உயிர் காப்புப் பிரச்னையாகும். இறுதியான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் முன், இந்தியாவின் தடுப்பூசிகளான, 'கோவிஷீல்டு, கோவேக்சின்' தடுப்பூசிகள் போடுவது பற்றி மத்திய - மாநில அரசுகள் ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.'டவுட்' தனபாலு: ஆசிரியர் வீரமணி எப்போது விஞ்ஞானி வீரமணி ஆனார் என்ற, 'டவுட்'

'டவுட்' தனபாலு

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து, - மக்கள் உயிர் காப்புப் பிரச்னையாகும். இறுதியான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் முன், இந்தியாவின் தடுப்பூசிகளான, 'கோவிஷீல்டு, கோவேக்சின்' தடுப்பூசிகள் போடுவது பற்றி மத்திய - மாநில அரசுகள் ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: ஆசிரியர் வீரமணி எப்போது விஞ்ஞானி வீரமணி ஆனார் என்ற, 'டவுட்' வருகிறதே! இதெல்லாம், வெங்காய விவகாரம் இல்லை. ஏராளமான விஞ்ஞானிகள் பல மாதங்களாக மண்டையை குடைந்து, பல பரிசோதனைகள் செய்து, தடுப்பூசி கண்டுபிடித்து, மக்களுக்கு வழங்கியுள்ளனர். அதை எல்லாம் மறந்து, மத்திய, மாநில அரசுகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, சும்மா சொல்லி வைக்கிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!


பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா
: குடியுரிமைச் சட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்து, 15 மாதங்கள் ஆகின்றன. இதுவரை, எந்தவொரு முஸ்லிமையாவது வெளியேற்றியுள்ளதா, மத்திய அரசு. அது போலத் தான், விவசாயச் சட்டத் திருத்தங்களும். அந்தச் சட்டத் திருத்தங்களால், விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதும் சரி தான். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, நாட்டைப் போராட்டக்களமாக மாற்றிய எதிர்க்கட்சிகள் தான், இப்போது, விவசாயிகளையும் போராடத் துாண்டுகின்றன என்பதில், 'டவுட்'டே இல்லை. சரி, இப்படியே துாண்டி விட்டுக் கொண்டிருக்கும் கட்சிகளை ஒடுக்க, மத்திய அரசு என்ன செய்யப் போகிறதோ என்பதே, விடை காண முடியாத கேள்வியாக உள்ளது!


காங்., தலைவர் அழகிரி:
துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட, 66 பதவிகளுக்கான, குரூப் -- 1 முதல்நிலை தேர்வுக்கு, 2.56 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 1.31 லட்சம் பேர் தான் எழுத வந்திருந்தனர்; 1.25 லட்சம் பேர் எழுத வரவில்லை. இதன்படி, 66 பதவிகளுக்கு, 1.31 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதனால், ஒரு பதவிக்கு, 1,989 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை விட, தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உறுதி செய்வதற்கு, வேறு புள்ளிவிபரம் தேவையில்லை.

'டவுட்' தனபாலு: மத்தியில், காங்., ஆட்சியில் இருந்த காலங்களில் தான், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது என்பதை, மக்கள் மறந்திருப்பர் என்ற எண்ணத்தில், இப்படி கதை விடுகிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. புள்ளிவிபரம் சரி தான்; அதன் பின்னணி தான் சரியில்லை!

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
06-ஜன-202117:38:02 IST Report Abuse
karutthu அவருடைய லக்ஷணம் இவளவு தான் என நாம் புரிந்து கொள்ளவேண்டும்
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
06-ஜன-202115:46:02 IST Report Abuse
karutthu கே எஸ் அழகிரி ???
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
06-ஜன-202107:43:49 IST Report Abuse
a natanasabapathy சோனியாவின் கைப்பாவை மன்மோகன் காலத்தில் 10 வருடங்களுக்கு மேல் புதிய நியமனம் எதுவும் செய்யப்பட வில்லை என்பது இந்த காவடி தூக்கிக்கு தெரியாது போலும் பல்லக்கு தூக்கியே பிழைப்பு நடத்தும் தேசிய கட்சி காங்கிரஸ் மட்டுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X