சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அதிருப்தியாளர்களை 'அள்ள' அழகிரி அணி வலை!

Added : ஜன 05, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அதிருப்தியாளர்களை 'அள்ள' அழகிரி அணி வலை! ''ஒரே நேரத்துல, இரண்டு பக்கமும், 'மீட்டர்' போடுறாரு பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார்,அன்வர்பாய்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''திருப்பூர் சிட்டி போக்குவரத்து போலீஸ்ல இருக்கிற அதிகாரியை தான் சொல்றேன்... இவர், 'டூட்டி' பார்க்கிறதை விட, எப்படியெல்லாம் வசூல் பண்ணலாம்னு, 'டிசைன் டிசைனா'

டீ கடை பெஞ்ச்


அதிருப்தியாளர்களை 'அள்ள' அழகிரி அணி வலை!''ஒரே நேரத்துல, இரண்டு பக்கமும், 'மீட்டர்' போடுறாரு பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார்,அன்வர்பாய்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருப்பூர் சிட்டி போக்குவரத்து போலீஸ்ல இருக்கிற அதிகாரியை தான் சொல்றேன்... இவர், 'டூட்டி' பார்க்கிறதை விட, எப்படியெல்லாம் வசூல் பண்ணலாம்னு, 'டிசைன் டிசைனா'
யோசிக்காரு பா...

''தன் வாகன டிரைவரா இருக்கிற ஊர்க்காவல் படை வீரர் மூலமா தான், வசூல் வேட்டை நடத்துறார்... சில எஸ்.ஐ.,க்களும், இவருக்கு உதவியா இருக்காங்க பா...

''மினி பஸ் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களின், 'கவனிப்பு' காரணமா, பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற ஷேர் ஆட்டோக்களை அப்புறப்படுத்த, போலீஸ் அதிகாரி முயற்சி எடுத்துட்டு இருக்காரு பா...

''பாதிக்கப்படுற ஆட்டோக்காரங்க வந்து பேசினப்ப, 'மாதம், 20 ஆயிரம் குடுத்துடுங்க'ன்னு அவங்களிடமும் வசூல் பேரத்தை ஆரம்பிச்சிருக்காரு பா...'' என்றார்,
அன்வர்பாய்.

''என்னவே, கொடிச்செல்வன்... பார்த்தும் பார்க்காத மாதிரி போறீரு...'' என, தெருவில் சென்றவரை பிடித்து, வம்பளக்க ஆரம்பித்தார் அண்ணாச்சி.உடனே, ''தரமில்லாத பொருட்கள்ல, தாலுகா அலுவலகத்தை கட்டிட்டு இப்ப முழிக்கிறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சேலம் மாவட்டம், சங்ககிரியில, 2.25 கோடி ரூபாய் செலவுல, தாலுகா அலுவலகம் கட்டுறாங்க... தரம் குறைவான பொருட்களை பயன்படுத்துறதா, முதல்வர் அலுவலகம் வரைக்கும் புகார்கள் போயிடுச்சுங்க...

''உஷாரான பொதுப்பணித் துறை அதிகாரிகள், வேற மாவட்ட அதிகாரிகளை வச்சு, பணிகளை ஆய்வு செய்தாங்க... இதுல, பணிகள்ல தரமில்லைங்கிறது பட்டவர்த்தனமா தெரிஞ்சுதுங்க...

''இந்த கான்ட்ராக்ட்டை எடுத்தவர், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு உறவுன்னு சொல்றாங்க... பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, 'கட்டிங்' குடுத்தவர், அவங்க சொன்ன இடத்துல தான், கட்டுமான பொருட்களையும் வாங்கியிருக்காருங்க...

''இப்ப, பணியில தரமில்லைன்னு தகவல் பரவிட்டதால, 'பில் பாஸ்' ஆகுறதுல சிக்கல் வந்துடுச்சாம்... இதனால, கான்ட்ராக்டரும், அவரிடம், 'கமிஷன்' வாங்குன பொதுப்பணித் துறை அதிகாரிகளும் கையை பிசைஞ்சிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.நண்பரை வழியனுப்பியபடி வந்த அண்ணாச்சி, ''ஈரோடு மாவட்டத்துல, வலையை வீசியிருக்காவ வே...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார்.

''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் நல்லசிவத்துக்கும், அந்தியூர் ஒன்றியச் செயலர் வெங்கடாசலத்துக்கும், தனித்தனி கோஷ்டி இருக்கு... இதனால, சில முக்கிய நிர்வாகிகள், ஓராண்டாகவே, அதிருப்தியில இருக்காவ வே...

''இந்த மாதிரி அதிருப்தியில இருக்கிறவங்களை இழுக்க, அழகிரி தரப்புல பேச்சு நடத்திட்டு இருக்காவ... மாவட்டச் செயலர் சுதாரிக்கலைன்னா, வடக்கு மாவட்ட தி.மு.க.,வுல பலர், அழகிரி பக்கம் தாவிடுவாங்கன்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கலைந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
06-ஜன-202120:21:09 IST Report Abuse
r.sundaram திமுக தானாகவே அழியும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது. இப்படியாவது தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கட்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-ஜன-202106:19:16 IST Report Abuse
D.Ambujavalli மாவட்டப் பெயரையே ‘சம்பந்தி’ மாவட்டம் என்று மாற்றி விடலாம் அவர் நெல்லுக்குப் பாய்வதில் புல்லுக்கும் பாய்ச்சி குட்டி கான்ட்ராக்டர்களை வாழ வைக்கிறார் போல. அவர்களை நம்பி பொருள்களை வாங்கினோம் என்று உரத்து சொல்லவும் முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X