ஜன., 6, 1966
சென்னையில், 1966 ஜன., 6ம் தேதி பிறந்தவர், ஏ.ஆர்.ரஹ்மான். இயற்பெயர், திலீப்குமார். இவரது தந்தை சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். தந்தையின் மரணத்திற்குப் பின், குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை உதறிவிட்டு, இசைக் கருவிகள் வாசித்தார். சில விளம்பரங்களுக்கு இசையமைத்தார்.கடந்த, 1992ம் ஆண்டு, ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். முதல் படத்திலேயே, தேசிய விருது பெற்றார். அதன் பின் தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து, பெரும் புகழ் பெற்றார்.ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்து, இரு ஆஸ்கர் விருதுகள் பெற்று, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார். 'கோல்டன் குளோப், பாப்டா' உட்பட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE