புதுச்சேரி : மேட்டுப்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் பிரியா ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயபிரகாஷ் கடத்தி கொலை, கட்டை அஜித், ஒப்பந்ததாரர் ஜீவா கொலை சம்பவம் நடந்தது. காங்., பிரமுகர் ஆறுமுகத்தை கொல்ல முயன்றகும்பல் மேட்டுப்பாளையத்தில் கூடி திட்டமிட்டது.மேட்டுப்பாளையத்தில் தனியார் மதுபான கடையில், ஒசி மதுபானம் கேட்டு, காசாளரை ரவுடி கும்பல் கத்தியால் வெட்டியது போன்றசம்பவங்களால் சட்டம்,ஒழுங்கு பிரச்னை அதிகளவில் இருந்தன.
இதனால், மேட்டுப்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் பிரியாவை அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவட்சவா உத்தரவிட்டார். போக்குவரத்து கிழக்கு பிரிவில் பணி புரியும் சப்இன்ஸ்பெக்டர் கலையரசன், மேட்டுப்பாளையம் சப்இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE