பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திண்டிவனம் : கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என தேசிய இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. திண்டிவனத்தில் தேசிய இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் சரஸ்வதி பங்கஜம் ஹாலில் நடந்தது. விழுப்புரம் மாவட்ட தலைவர் புருேஷாத்தம்மன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் அரிகரன் முன்னிலை

திண்டிவனம் : கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என தேசிய இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திண்டிவனத்தில் தேசிய இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் சரஸ்வதி பங்கஜம் ஹாலில் நடந்தது. விழுப்புரம் மாவட்ட தலைவர் புருேஷாத்தம்மன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் அரிகரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், கூட்டமைப்பின் தேசிய தலைவர் நீதிபதி ஜோதிமணி, செயலாளர் ஸ்ரீராம்,துணைத்தலைவர் சீத்தாராம், ஒருங்கிணைப்பாளர் பாலயோகி, மண்டல செயலாளர் அகோரி மணி பேசினர்.

கூட்டத்தில், கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும். மலைக் கோவில்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க வேண்டும். கோவில்களில் உள்ள குருக்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X