சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தவறாக செய்தி பரப்புவேன் என மிரட்டியவர் மீது வழக்கு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இரண்டாவது திருமணத்திற்கு பெண் தர முடியாது எனக்கூறியதால், பெண் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவிடுவேன் என மிரட்டிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆத்துார் கல்லாநத்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா,36; இவர் கடலுார் ரெட்டாக்குறிச்சி அடுத்த மாங்குளம் கிராமத்தை சேர்ந்த பத்தாசலம்,60; மகள் கங்காதேவியை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இரண்டாவது திருமணத்திற்கு பெண் தர முடியாது எனக்கூறியதால், பெண் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவிடுவேன் என மிரட்டிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆத்துார் கல்லாநத்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா,36; இவர் கடலுார் ரெட்டாக்குறிச்சி அடுத்த மாங்குளம் கிராமத்தை சேர்ந்த பத்தாசலம்,60; மகள் கங்காதேவியை தனக்கு திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளார்.ராஜாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆனது குறித்து தெரிந்துகொண்ட பத்தாசலம், 2-ம் தாரமாக தனது மகளை தரமுடியாது என மறுத்து விட்டார்.

கடந்த நவ 20-ம் தேதி கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் பத்தாசலத்தை பார்த்த ராஜா ஆத்திரமடைந்து பெண்ணை தரவில்லை என்றால், அவர் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவிடுவேன் என்று பத்தாசலத்தை மிரட்டி, திட்டி தாக்கினார். புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் ராஜா மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X