புதிய பார்லிமென்ட் கட்டுமானத்துக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 05, 2021 | கருத்துகள் (13+ 13)
Share
Advertisement
புதுடில்லி :டில்லியில் புதிய பார்லிமென்ட் வளாகம் கட்டும் திட்டத்துக்கான தடையை, உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் இருந்து, இந்தியா கேட் வரையிலான, 3 கி.மீ., துார சாலையில், மத்திய அரசு கட்டடங்கள் கட்டுவதற்கான தடை நீங்கியுள்ளது. டில்லியில், தற்போதுள்ள பார்லிமென்ட் வளாகத்தில் அதிக உறுப்பினர்கள் அமரும் வசதியில்லை. மேலும், டில்லியின் பல்வேறு
புதிய பார்லிமென்ட், கட்டுமானம், உச்ச நீதிமன்றம், பச்சைக்கொடி!

புதுடில்லி :டில்லியில் புதிய பார்லிமென்ட் வளாகம் கட்டும் திட்டத்துக்கான தடையை, உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் இருந்து, இந்தியா கேட் வரையிலான, 3 கி.மீ., துார சாலையில், மத்திய அரசு கட்டடங்கள் கட்டுவதற்கான தடை நீங்கியுள்ளது.

டில்லியில், தற்போதுள்ள பார்லிமென்ட் வளாகத்தில் அதிக உறுப்பினர்கள் அமரும் வசதியில்லை. மேலும், டில்லியின் பல்வேறு இடங்களில், வாடகை கட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, ஒரு இடத்தில் அமைப்பது, புதிய பார்லிமென்ட் வளாகம் கட்டுவது அடங்கிய, மத்திய விஸ்டா திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.


அனுமதிகடந்த, 2019 செப்.,ல் இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது. மொத்தம், 1,200 எம்.பி.,க்கள் அமரும் வகையில், நவீன வசதிகள் உடைய, புதிய பார்லிமென்ட் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.தற்போதுள்ள பார்லிமென்ட் வளாகத்துக்கு அருகில், முக்கோண வடிவில், இந்த புதிய பார்லிமென்ட் அமைய உள்ளது. மொத்தம், 971 கோடி ரூபாய் செலவில், வரும், 2024ல், நாட்டின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது செயல்படும் வகையில், இதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த திட்டத்துக்கான நிலம் வகைப்பாடு மாற்றப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி கொடுத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடை விதித்து, உச்ச நீதிமன்றம், கடந்த மாதம், 7ம் தேதி உத்தரவிட்டது.அதே நேரத்தில், ஏற்கனவே திட்டமிட்டபடி, அடிக்கல் நாட்டு விழா நடத்த அனுமதி வழங்கியது. இதன்படி, புதிய பார்லிமென்ட் வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டிச., 10ல் நடந்தது.


உரிய பாதுகாப்புஇதற்கிடையே, இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சஞ்சிவ் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், 2 : 1 என்ற அடிப்படையில், மத்திய விஸ்டா திட்டத்தை செயல்படுத்த, பெரும்பான்மை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:திட்டத்தை செயல்படுத்த உள்ள நிறுவனங்கள், காற்று மாசு ஏற்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திட்டத்தை துவங்குவதற்கு முன், பாரம்பரிய கட்டங்கள் பராமரிப்பு குழு உட்பட அனைத்து துறைகளின் ஒப்புதலை பெற வேண்டும்.

நில வகைப்பாடு மாற்றப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதில் எந்தத் தவறும் நடந்ததாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை. அதனால், திட்டத்தை செயல்படுத்த இருந்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது.இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.அதே நேரத்தில், இந்த அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கண்ணா, திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளித்து உள்ளார். ஆனால், 'நில வகைப்பாடு மாற்றியது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை ஏற்க முடியாது' என, தன் தீர்ப்பில் அவர் கூறியுள்ளார்.


எதிர்பார்ப்புபுதிய பார்லிமென்ட் வளாகம் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதன் வாயிலாக, பிரதமரின் கனவு திட்டங்களில் ஒன்றான, புதிய பார்லிமென்ட் வளாகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய, மத்திய அரசு அலுவலகங்கள் அமைவதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.
அதனால், விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இதுவரை நடந்ததுமத்திய விஸ்டா திட்டத்தில் இதுவரை நடந்துள்ள முன்னேற்றங்கள்:

செப்., 2019: மத்திய விஸ்டா திட்டம் அறிவிப்பு

2020, பிப்., 11: மத்திய விஸ்டா திட்டத்தை செயல்படுத்தும் முன், பெருநகர திட்டத்தில் மாற்றம் செய்ய, முன் அனுமதி பெற வேண்டும் என, டிடி.ஏ., எனப்படும், டில்லி வளர்ச்சி கழகத்துக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

2020, பிப்., 28 : தனி நீதிபதி உத்தரவுக்கு, டில்லி உயர் நீதிமன்ற அமர்வு தடை

2020, ஜூலை., 17: திட்டம் தொடர்பான, நில வகைப்பாடு மாற்றம், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிரான வழக்குகளை, உச்ச நீதிமன்றம், விசாரிக்க துவங்கியது

2020, நவ., 5: தீர்ப்பை ஒத்தி வைத்தது

2020, டிச., 7: 'அடிக்கல் நாட்டும் விழாவை நடத்தலாம், ஆனால், கட்டுமானத்தை துவக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

-2020, டிச., 10: திட்டத்துக்கு, பிரதமர், நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார்

2021, ஜன., 5: புதிய பார்லிமென்ட் உட்பட, மத்திய விஸ்டா திட்டத்துக்கான தடைகளை, உச்ச நீதிமன்றம் நீக்கியது.


சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்!உலகத் தரம் வாய்ந்த, தேசியத் தலைநகராக டில்லி விளங்கப் போகிறது. புதிய பார்லிமென்ட் அடங்கிய விஸ்டா திட்டத்துக்கு இருந்த தடைகளை விலக்கும் தீர்ப்பை வரவேற்கிறோம். சுற்றுச்சூழலுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்போம். கட்டுமானப் பணிகளின்போதும், அதை கடைப்பிடிப்போம்.ஹர்தீப் சிங் பூரி மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர், பா.ஜ.,

Advertisement
வாசகர் கருத்து (13+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜன-202110:03:24 IST Report Abuse
ஸாயிப்ரியா வெளி நாட்டில் பிரியங்கா வாத்ரா கட்டிய மா.... பெறும் இடத்திற்கு பண்ணிய பணத்தில் 20பர்சன்ட் கூட ஆகாது.
Rate this:
Cancel
06-ஜன-202109:57:13 IST Report Abuse
ருத்ரா Happy G
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
06-ஜன-202109:39:16 IST Report Abuse
Sivagiri சுற்றிலும் வெளிநாட்டு செடிகளை வளர்க்காமல் - நம் நாட்டு ஆலமரம், வேம்பு, அரசமரங்களை வளர்க்க வேண்டும்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
06-ஜன-202111:47:43 IST Report Abuse
கொக்கி குமாரு உண்மைதான், தவறியும் சந்தன மரங்களை வளர்த்து விடவேண்டாம். திருட்டு திமுகவின் எம்பிக்கள் ஆட்டையை போட்டாலும் போட்டுவிடுவார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X