பொது செய்தி

இந்தியா

கேரளாவில் பறவை காய்ச்சல் மாநில பேரிடராக அறிவிப்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்:கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல், மனிதர்களுக்கும் பரவக் கூடிய அபாயம் இருப்பதால், அதை மாநில பேரிடராக அறிவித்து, கண்காணிப்பு நடவடிக்கையை, அரசு தீவிரப்படுத்தி உள்ளது.கண்காணிப்பு கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் சில பகுதிகளில், ஆயிரக்கணக்கான

திருவனந்தபுரம்:கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல், மனிதர்களுக்கும் பரவக் கூடிய அபாயம் இருப்பதால், அதை மாநில பேரிடராக அறிவித்து, கண்காணிப்பு நடவடிக்கையை, அரசு தீவிரப்படுத்தி உள்ளது.


கண்காணிப்பு



கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் சில பகுதிகளில், ஆயிரக்கணக்கான வாத்துகள், திடீரென மர்மமான முறையில் இறந்தன.இறந்த வாத்துகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன. அதில், பறவை காய்ச்சல் வைரஸ் பாதிப்பால், வாத்துகள் இறந்தது தெரியவந்தது.இதையடுத்து, கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


அபாயம்



இப்பகுதிகளில், வாத்து, கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு, 1 கி.மீ., சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்து, கோழி உட்பட, 40 ஆயிரம் பறவைகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியின், 10 கி.மீ., சுற்றளவில் காணப்படும், புலம்பெயர்ந்த பறவைகளை கண்காணிக்கும் பணியில், வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாநில கால்நடை துறை அமைச்சர் கே.ராஜு தலைமையில், உயர்மட்ட கூட்டம் நடத்தப் பட்டது. இந்த பறவை காய்ச்சல், மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதால், இதை மாநில பேரிடராக அரசு அறிவித்துள்ளது. மேலும், பாதிப்பு உள்ள மாவட்டங்களில், கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X