பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கிள்ளை : கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கம் சார்பில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. வங்கித் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் அசோகன், சேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர்.வங்கிச் செயலர் முத்துகுமரசாமி வரவேற்றார். ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பை, பாண்டியன்

கிள்ளை : கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கம் சார்பில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.

வங்கித் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் அசோகன், சேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர்.வங்கிச் செயலர் முத்துகுமரசாமி வரவேற்றார். ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பை, பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.விழாவில், மாவட்ட அவைத் தலைவர் குமார், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆனந்தன், ஊராட்சித் தலைவர் சித்ரா முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி சாமிதுரை, நிர்வாகிகள் ஜெயராமன், ஸ்ரீதரன், சொக்கலிங்கம், மணிகண்டன், ரவி, கருணாமூர்த்தி, தமிழ்ச்செல்வன், தனசிங் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்றனர்.காசாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

சிறுபாக்கம்சிறுபாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மங்களூர் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.வங்கிச் செயலாளர் இளம்வழுதி, கூட்டுறவு வங்கித் தலைவர்கள் தங்கவேல், குமார், சந்திரபாபு, ராஜேந்திரன், அ.தி.மு.க., நிர்வாகிகள் அய்யாசாமி, ஜகஜானந்தன், இந்திரா செல்வராஜ், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோன்று, மங்களூர், அடரி, வள்ளிமதுரம், எஸ்.புதுார், வடபாதி பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

விருத்தாசலம்விருத்தாசலம் ஜெயில் தெருவில், நடந்த நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., நகர மாணவரணி செயலர் செல்வகணபதி தலைமை தாங்கினார்.வடக்கு ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம், முன்னாள் பால் வளத் தலைவர் வேங்கடவேணு முன்னிலை வகித்தனர். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.வார்டு செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் செல்வம், வெங்கடபதி, விமல், சரவணன், அய்யப்பன், ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X