பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, ஏலக்காய், கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது.நேற்று முன்தினம் முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 200 கார்டுதாரர்களுக்கு வழங்க

கடலுார் : கடலுாரில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, ஏலக்காய், கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது.நேற்று முன்தினம் முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 200 கார்டுதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கடலுார் பகுதியில் உள்ள கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல ரேஷன் கடைகளில் கம்புகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். அதே சமயத்தில் பல இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X