விழுப்புரம் : விழுப்புரத்தில் பெண்ணிடம் நுாதன முறையில் நகை, பணத்தை அபேஸ் செய்த இரு பெண்களை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி தனலட்சுமி,45; இவர், நேற்று முன்தினம் விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைத்து ரூ.84 ஆயிரம் கடன் பெற்றார்.பின்னர் பணத்தையும், மூன்றரை சவரன் நகைகளையும் பையில் வைத்துக் கொண்டு, பஸ்சிற்காக வங்கி எதிரே நின்றுக் கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத இரு பெண்கள் தனலட்சுமியிடம் பேச்சு கொடுத்தனர்.
அப்போது, ஒரு பெண், தனலட்சுமியின் தலையில், கையால் தடவியபடி பேசினார். பின்னர், தனலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, பணம், நகை வைத்திருந்த பை திருடு போயிருந்தது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, தனலட்சுமியிடம் நுாதன முறையில் நகை, பணத்தை திருடிச் சென்ற இரு மர்ம பெண்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE