சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நன்னடத்தை விதிகளை மீறிய 10 பேருக்கு சிறை: ஆர்.டி.ஓ., உத்தரவு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு சட்ட நன்னடத்தை விதிகளை மீறிய 10 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். கடலுார் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை திருத்தும் வகையில், முன்னெச்சரிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிந்து, ஆர்.டி.ஓ.,விடம்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு சட்ட நன்னடத்தை விதிகளை மீறிய 10 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.

கடலுார் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை திருத்தும் வகையில், முன்னெச்சரிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிந்து, ஆர்.டி.ஓ.,விடம் ஆஜர்படுத்துவது வழக்கம்.அங்கு, குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என, நன்னடத்தைக்கான உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படி எழுதி கொடுத்தவர்களை அந்தந்த பகுதி போலீசார் கண்காணித்து வருவர். கடலுார் மாவட்டத்தில் நன்னடத்தை பத்திரம் எழுதிக் கொடுத்த நபர்கள், தான் அளித்த உறுதிமொழியை மீறி, தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதையடுத்து, எஸ்.பி,. ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுதும் அந்தந்த பகுதி போலீஸ் நிலையம் மூலம் கண்காணித்ததில், காட்டுமன்னார்கோவில் அடுத்த கோவில்பத்து பன்னீர்செல்வம், லால்பேட்டை விஜி, குமராட்சி, கத்தரிமேடு கார்த்திக், சிதம்பரம் கொத்தங்குடி தெரு மணிகண்டன், துணிசரமேடு சதீஷ், மங்கலம்பேட்டை அம்பேத்கார், ஊமங்கலம் பால முரளி, சமட்டிக்குப்பம் ஆனந்த், நெய்வேலி சக்திவேல், விருத்தாசலம் மணிகண்டன் என 10 பழைய குற்றவாளிகள் உறுதிமொழி பத்திரத்தை மீறியதாக அவர்கள் மீது ஆர்.டி.ஓ.,விடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.அந்த 10 பேருக்கும், 5 மாதங்கள் முதல் ஓராண்டு வரை தண்டனை வழங்கி ஆர்.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X