சென்னை:
தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வி துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிறுவனத்தில், மூன்றாண்டு சிவில் இன்ஜினியரிங் டிப்ளமா முடித்தவர்களிடம்
இருந்து, நில அளவை செய்வதற்கான உரிமம் பெறுவதற்குரிய, மூன்று மாத
பயிற்சிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த முழு விபரங்களை, www.tn.gov.in என்ற
இணையதளத்தில் காணலாம். விண்ணப்பதாரர்,இந்திய குடிமகனாகவும்,ஐந்து
ஆண்டுகளாக, தமிழகத்தில் வசிப்பவராகவும், 10ம் வகுப்பு இறுதி தேர்வில்,
தமிழை ஒரு பாடமாக கற்றவராகவும் இருத்தல் வேண்டும். பயிற்சி கட்டணம், 30
ஆயிரம் ரூபாய்.தங்குமிடம், உணவு, பயண கட்டணங்களை, பயிற்சியாளர்களே ஏற்றுக்
கொள்ள வேண்டும்.
பயிற்சி
கட்டணத்தை, விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு, பயிற்சிக்கு
அழைக்கப்படும்போது செலுத்த வேண்டும். ஒரு அணிக்கு, 100 பேர் தேர்வு
செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 'முதல்வர், நில அளவை
பயிற்சி நிலையம், ஒரத்தநாடு-, தஞ்சாவூர் மாவட்டம் - 614625' என்ற
முகவரிக்கு, வரும், 20ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என, நில அளவை
பயிற்சி நிலைய முதல்வர் லுார்துசாமி தெரிவித்து உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE