அதிபர் பதவியை விடமாட்டேன்: டிரம்ப் மீண்டும் முரண்டு

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்:''அதிபர் பதவியை விடமாட்டேன். கடைசி வரை போராடுவேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் முரண்டு பிடித்துள்ளார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், கடந்தாண்டு, நவ., 3ல் நடந்தது. இதில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளை ஏற்க, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்ப், தொடர்ந்து மறுத்து வருகிறார்.
அதிபர் பதவியை விடமாட்டேன்: டிரம்ப் மீண்டும் முரண்டு

வாஷிங்டன்:''அதிபர் பதவியை விடமாட்டேன். கடைசி வரை போராடுவேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் முரண்டு பிடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், கடந்தாண்டு, நவ., 3ல் நடந்தது. இதில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளை ஏற்க, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்ப், தொடர்ந்து மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, மாகாண நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. உச்ச நீதிமன்றமும், டிரம்பின் மனுக்களை நிராகரித்தது.'எலக்டோரல் காலேஜ்' எனப்படும், மாகாண பிரதிநிதிகள் ஓட்டளித்து, அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வென்றதாக அறிவித்தனர்.
அதை உறுதி செய்வதற்காக, பார்லிமென்டின் கூட்டுக் கூட்டம் நடக்க உள்ளது. துணை அதிபர் மைக் பென்ஸ், அதிபர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும்.

இந்நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில், செனட் எம்.பி.,க்கான தேர்தல் பிரசாரத்தில், டிரம்ப் பேசியதாவது:அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது. அதிபர் பதவியை விடமாட்டேன். அனைத்து வகையிலும் போராடுவேன்.எலக்டோரல் காலேஜ் ஓட்டளித்து விட்டால், பைடன் வென்றதாக ஆகிவிடுமா. அவரை வெள்ளை மாளிகைக்குள் நுழைய விடமாட்டேன்.பார்லி.,யின் கூட்டுக் கூட்டத்தில், அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என, குடியரசு கட்சியினர் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டுக் கூட்டத்தில், தேர்தல் முடிவுகளை எதிர்க்கவும், விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தவும், டிரம்ப் ஆதரவு எம்.பி.,க்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர். அதற்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உட்பட பலர், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
06-ஜன-202119:43:37 IST Report Abuse
Vijay D Ratnam சீன ஸ்லீப்பர் செல் கூட ட்ராம்பால் சண்டையிட முடியாது. ஜனவரி 20 ந்தேதி தூக்கி வெளியே போட்டுவிடுவார்கள். அப்புறம் நம்ம சுடலை கதிதான். இப்போ இந்த ஆட்சி போயிடும் அப்போ இந்த ஆட்சி போயிடும்னு புலம்ப வேண்டியதுதான்.
Rate this:
Cancel
Jay - SFO,யூ.எஸ்.ஏ
06-ஜன-202115:32:19 IST Report Abuse
Jay சாது செல்வராஜ் மோகன் சி லாசரஸ் போன்றவர்கள் இவனை அடுத்த அதிபராக தேர்ந்தெடுத்ததாக இங்கே குறி சொன்னார்களே, அவர்கள்?
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-ஜன-202113:23:26 IST Report Abuse
Malick Raja இவரின் கலக்கம் இவரின் நண்பர் ஒருவருக்கும் சுனக்கத்தை ஏற்படுத்திவிட்டது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X