கடலுார் : கடலுார் துறைமுகம் அடுத்த சேடப்பாளையத்தில் போலீஸ் துறை சார்பில் நுாலகம் அர்ப்பணிப்பு விழா நடந்தது.
கடலுார் அனைத்து வணிகர் சங்கத் தலைவர் முத்துக்குமரனார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் ரவி முன்னிலை வகித்தார். வணிகர் சங்க பொருளாளர் திருவள்ளுவர் வரவேற்றார்.நுாலகத்திற்குத் தேவையான அலமாரி, மேஜை, புத்தகங்கள் ஆகியவற்றை போலீஸ் துறை சார்பில் டி.எஸ்.பி., சாந்தி வழங்கி, நுாலகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வணிகர் சங்கத் தலைவர் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கினார்.
விழாவில் டாக்டர் சுரேஷ், இன்ஜினியர் கிேஷார்குமார், ஊராட்சி தலைவர் சீனுவாசன், கூட்டுறவு சங்கத் தலைவர் கருணாகரன், நுாலக வாசகர் வட்ட ஜெய்சங்கர், அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.வசந்தம் நாகராஜ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE