சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழிவுநீர் சிலாப் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

Added : ஜன 05, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் நிறுத்தம் அருகே உடைந்த கழிவுநீர் கால்வாய் சிலாப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டியில் காந்தி சாலை - புதுப்பேட்டை சாலையை இணைக்கும் படைவீட்டம்மன் கோவில் திருத்தேர் இணைப்பு சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மேல் போடப்பட்ட சிலாப் கடந்த 6 மாதங்களுக்கு முன் உடைந்து சேதமானது.இப்பகுதி பண்ருட்டி -

பண்ருட்டி : பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் நிறுத்தம் அருகே உடைந்த கழிவுநீர் கால்வாய் சிலாப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்ருட்டியில் காந்தி சாலை - புதுப்பேட்டை சாலையை இணைக்கும் படைவீட்டம்மன் கோவில் திருத்தேர் இணைப்பு சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மேல் போடப்பட்ட சிலாப் கடந்த 6 மாதங்களுக்கு முன் உடைந்து சேதமானது.இப்பகுதி பண்ருட்டி - அரசூர் - திருக்கோவிலுார் செல்லும் சாலை, பண்ருட்டி - உளுந்துார்பேட்டை சாலையை இணைக்கும் முக்கிய மும்முனை சாலையாக உள்ளது.இதனால், ஏராளமான வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன. சாலை நடுவே உள்ள பள்ளத்தால் வாகனங்கள் மெதுவாக காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஒரு சில நாட்களில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இனியும் அதிகாரிகள் தாமதிக்காமல் கழிவுநீர் சிலாப்பை அகற்றி புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X