பொது செய்தி

தமிழ்நாடு

ஜவான்ஸ் பவன் சாலை

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் ஜவான்ஸ் பவன் சாலை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. கடலுார் ஜவான்ஸ் பவன் சாலை கடந்த ஒரு ஆண்டாக குண்டும் குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. சாலைசீரமைப்பு பணி துவங்குவதற்கான பூமி பூஜை நடந்தது.கலெக்டர் சந்திரசேகர் சகாமுரி தலைமை தாங்கினார். அமைச்சர் சம்பத் பூமி பூஜை நடத்தி பணியினை துவக்கி

கடலுார் : கடலுார் ஜவான்ஸ் பவன் சாலை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

கடலுார் ஜவான்ஸ் பவன் சாலை கடந்த ஒரு ஆண்டாக குண்டும் குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. சாலைசீரமைப்பு பணி துவங்குவதற்கான பூமி பூஜை நடந்தது.கலெக்டர் சந்திரசேகர் சகாமுரி தலைமை தாங்கினார். அமைச்சர் சம்பத் பூமி பூஜை நடத்தி பணியினை துவக்கி வைத்தார்.மேலும், கம்மியம்பேட்டை - குண்டுசாலை மேம்பாலம் கட்டும் பணிக்கு மாற்றுப் பாதையாக அமைப்பதற்கு ஜவான்ஸ் பவன் சாலையை 1.8 கி.மீ., துாரம் சீரமைக்கும் பணி 196.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுகிறது.

இந்த சாலையை மேம்படுத்துவதன் மூலம் கடலுார் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். ஜவான்ஸ் பவன் சாலை நெடுஞ்சாலை துறை மூலம் விரிவாக்கம் செய்து பராமரிக்கப்படும்.இந்த பணி விரைவாக துவங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) முருகேசன், ஒன்றியகுழுத்தலைவர் தெய்வபக்கிரி, தாசில்தார் பலராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X