பொது செய்தி

தமிழ்நாடு

அழிந்தன! செஞ்சி பகுதியில் பாம்பு, நரிகள்...மின்வேலியால் வந்தது வினை

Added : ஜன 05, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி பகுதியில் பல ஆண்டுகளாக காட்டுபன்றிக்கு வைக்கும் மின்வேலியில் சிக்கி பாம்புகளும், நரிகளும் பெருமளவு அழிந்து விட்டன. இதனால் எலி, மயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக பெருகி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் முற்றிலும் விவசாயம் சார்ந்த செஞ்சி பகுதியில் ஏராளமான காடுகளும், மலைகளும் உள்ளன. இந்த காடு, மலைகளை ஒட்டி பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்

செஞ்சி : செஞ்சி பகுதியில் பல ஆண்டுகளாக காட்டுபன்றிக்கு வைக்கும் மின்வேலியில் சிக்கி பாம்புகளும், நரிகளும் பெருமளவு அழிந்து விட்டன. இதனால் எலி, மயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக பெருகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் முற்றிலும் விவசாயம் சார்ந்த செஞ்சி பகுதியில் ஏராளமான காடுகளும், மலைகளும் உள்ளன. இந்த காடு, மலைகளை ஒட்டி பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் பயிரிடப்படும் நெல், கரும்பு, மணிலா, காய்கறிகளை இரவு நேரத்தில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் நாசம் செய்து விடுகின்றன. மண்ணை கிளறி வேர் வரை தோண்டி நிலங்களை பாழ்படுத்தி விடுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த கயிறு கட்டுதல், வேட்டி, சேலை கட்டுவது, பொம்மைகளை வைப்பது என விவசாயிகள் மேற்கொண்ட எந்த உத்தியும் எடுபடவில்லை.

எனவே, காட்டை ஒட்டி உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த இரவு நேரத்தில் சட்ட விரோதமாக மின் வேலியை அமைக்க துவங்கினர்.கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். இதே போல் எலிகளின் தொல்லை அதிகம் உள்ள விவசாய நிலங்களிலும் மின் வேலி அமைக்கப்படுகிறது.இந்த மின் வேலிகளில், காட்டுபன்றிகள, எலிகள் சிக்கியதை விட அதிக அளவில் பாம்புகள், முயல்கள், நரிகள் சிக்கின.

ஒரு கட்டத்தில் நல்ல பாம்புகளில் பெரும்பகுதி மின் வேலியில் சிக்கி அழிந்து விட்டன. நல்ல பாம்புகளுக்கு பிடித்த உணவு எலிகள். இதே போல் காலியாங்குட்டி எனப்படும் விஷத்தன்மை இல்லாத பாம்புகள் வயல் வெளிகளில் நுாற்றுக்கணக்கில் காணப்படும். இவை எலிகள் குட்டியாக இருக்கும் போதே தின்றுவிடும். இந்த வகை பாம்புகளை இப்போது அரிதாகவே காணமுடிகிறது. நரிகள் காட்டில் உள்ள பறவைகளின் முட்டைகளை தேடி சென்று உடைத்து குடித்து விடும். குறிப்பாக தரை பகுதியில் முட்டையிடும் பறவைகளின் முட்டைகளை மோப்பம் பிடித்து சென்று உடைத்து குடித்து விடும். நரி இனம் முற்றிலும் அழிந்து விட்டதால், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாம்புகளும், நரிகளும் அழிந்ததன் எதிர் விளைவை தற்போது செஞ்சி பகுதி விவசாயிகள் உணரத் துவங்கி விட்டனர்.எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு எலிகள் பெருக்க மடைந்து விட்டன. இதே போல் மயில்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், இந்தாண்டு விவசாயிகள் பெருமளவு மகசூலை இழந்து விட்டனர். இயற்கைக்கு முரணாக செய்யும் செயல்கள், அதற்கான பக்க விளைவுகளை ஏற்படுத்த தவறுவதில்லை. இருப்பினும், காட்டுபன்றிகளுக்கு மின் வேலி அமைப்பதை விவசாயிகள் நிறுத்தவில்லை.

இதேநிலை நீடித்தால், எஞ்சியுள்ள பாம்பு இனங்களும், முயல்களும் மிக விரைவில் அற்று போகும். இயற்கையின் சமன்பாட்டை பாதுகாக்க வேண்டிய நெருக்கடியும், அதன் அவசியத்தையும் அரசு மற்றும் சுற்றச்சூழல் அமைப்புகள் விவசாயிகளிடம் பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இயற்கையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வனத்துறை மெத்தனம்விவசாய நிலங்களில் மின் வேலி அமைப்பது வனத்துறைக்கு தெரிந்தாலும் அவர்கள் அதில் பெரிய அளவில் நடவடிக்கை எடுப்பதில்லை.

வன விலங்குகள் மின் வேலியில் சிக்கி வெளியே தெரிய வரும் போது மட்டும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கின்றனர்.ஆனால் பெரும் பகுதி சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை. இதனால் காட்டை விட்டு வெளியேறி செல்லும் முயல், நரி, பாம்புகளின் அழிவை பற்றியும், இவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்தும் எந்த அக்கறையும் இல்லாமல் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X