பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
புவனகிரி, : கீழ் புவனகிரியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, புவனகிரி நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வங்கி செயலர் செல்வம் வரவேற்றார். மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். வங்கித் தலைவர் சசிசெல்வராஜ் பொங்கல் பரிசு தொகுப்பை

புவனகிரி, : கீழ் புவனகிரியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு, புவனகிரி நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வங்கி செயலர் செல்வம் வரவேற்றார். மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். வங்கித் தலைவர் சசிசெல்வராஜ் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி இயக்குனர்கள் ஆனந்தன், வாசுகி, ஆறுமுகம், இளங்கோவன், சிவஞானம், சரஸ்வதி, சிவக்குமார், வேலு, பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.துணைத்தலைவர் இளங்கோ நன்றி கூறினார்.

கீரப்பாளையம்கீரப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வங்கி செயலர் செல்வகுமார் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் முருகுமணி, மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, ஜெ., பேரவைத் தலைவர் மனோகர், இணைச் செயலர் இசைபாலா முன்னிலை வகித்தனர்.கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, வங்கி தலைவர் சரவணன் ஆகியோர் 2,892 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.இயக்குனர்கள் திருநாராயணன், கபிலன், மணி, ராமலிங்கம், முருகானந்தம், பூங்குழலி, புவனேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். உத்திரவேல் பிரபு நன்றி கூறினார்.

ஸ்ரீமுஷ்ணம்ஸ்ரீமுஷ்ணம் பகுதி ரேஷன் கடைகளில் நடந்த நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தலைவர் பூமாலை கேசவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை சேர்மன் பாலசுந்தரம், ஒன்றிய சேர்மன் லதா ஜெகஜீவன்ராம் முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கி பேசினார்.மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் குணசேகரன், முன்னாள் தொகுதி செயலாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.வேப்பூர்வேப்பூர் அடுத்த பெரியநெசலுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, நல்லுார் ஒன்றிய துணைச் சேர்மன் ஜான்சிமேரி தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் தங்கராசன் முன்னிலை வகித்தார்.ரேஷன் கடை பணியாளர் மீனா வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள் அம்சவள்ளி, சாந்தி, அ.தி.மு.க., நிர்வாகிகள் பிரபு, சீனிவாசன், சக்திவேல், முனியன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோன்று, நல்லுாரில் ஊராட்சித் தலைவர் புஷ்பா பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கினார்.கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் குமரேசன், ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன், ஊராட்சி செயலர் திருநீலமணிகண்டன், ரேஷன் கடை பணியாளர் பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X