உருமாறிய கொரோனா: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
லண்டன்:ஐரோப்பிய நாடான பிரிட்டனில், உருமாற்றம் அடைந்த அதிக வீரியம் உள்ள கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பிரிட்டனில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை, பேரலையாக உருவாகி, மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில், பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலை ஆகியவற்றின் கொரோனா தடுப்பூசி மருந்தை, சுகாதார ஊழியர்கள், மூத்த குடிமக்கள்

லண்டன்:ஐரோப்பிய நாடான பிரிட்டனில், உருமாற்றம் அடைந்த அதிக வீரியம் உள்ள கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பிரிட்டனில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை, பேரலையாக உருவாகி, மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில், பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலை ஆகியவற்றின் கொரோனா தடுப்பூசி மருந்தை, சுகாதார ஊழியர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு போடும் பணி தீவிரமாக நடக்கிறது.

இந்நிலையில், உருமாறிய, அதிக வீரியமுள்ள கொரோனா வைரசும், வேகமாக பரவி வருகிறது. அத்தியாவசிய தேவைபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நேற்று நாட்டு மக்களிடம், 'டிவி'யில் உரையாற்றியதாவது:பிரிட்டன், கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில், கொரோனா பரவலை தடுக்க பள்ளிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டன.

இப்போது இரண்டாவது அலை பரவி வருவதால், மருத்துவமனைகளில் எந்த நேரமும் அதிக அளவில் கொரோனா நோயாளிகள் வர வாய்ப்புண்டு. அதனால், கடந்த ஆண்டு போன்று, மீண்டும் ஊரடங்கு நிலை அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.கடந்த ஆண்டு ஏப்ரலில் காணப்பட்டதை விட, மருத்துவமனைகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை, மூன்று மடங்கு உயர்ந்து, 27 ஆயிரத்தை எட்டியுள்ளது.


தடுப்பூசி திட்டம்



ஆறுதல் அளிக்கும் அம்சம் என்னவென்றால், கடந்த ஆண்டை போலன்றி, தற்போது, கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டு வருவது தான். பிரிட்டன் வரலாற்றில், மிகப் பெரிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுகாதார பணியாளர்கள், முன்கள ஊழியர்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோர், 70 வயதுக்கு மேற்பட்டோர் என, நான்கு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

வரும் வாரங்களில் நிலைமை மேலும் தீவிரமாகும் என தெரிகிறது. அதனால், மக்கள் வீடுகளில் தங்கியிருக்கும்படி வேண்டுகிறேன். இது மிகக் கடினம் என்பது எனக்குத் தெரியும். இருந்தபோதிலும், தடுப்பூசி உதவியால், கொரோனாவுக்கு எதிரான கடைசி போராக இது இருக்கும் என நம்புகிறேன். மக்கள், ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் உரையாற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X