ராமநாதபுரம் : கடலாடி தாலுகா சிக்கல் பகுதி விவசாயிகளுக்கு பெயரளவில் பயிர் காப்பீட்டுதொகை வழங்கப்பட்டுள்ளது.
நுாறுசதவீதம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.கடலாடி தாலுகாவில் சிக்கல், பனிவாசல், இதம்பாடல், ஏர்வாடி ஆகிய பகுதி விவசாயிகள் 2018- -19 ஆண்டிற்கு பயிர்காப்பீடு செய்தனர். சிக்கல் பகுதிகளை தவிர்த்து ஏனைய பகுதி விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.22ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் சிக்கல் பகுதிக்கு 5200 வங்கி கணக்கு மூலம் வழங்கியுள்ளனர். இதனையடுத்து பிறபகுதிகளை போல சிக்கல் பகுதி விவசாயிகளுக்கு நுாறுசதவீத இழப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிக்கல் விவசாயி பாக்கியநாதன் கூறுகையில், 'மாவட்டத்தில் இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக பழைய மாவட்ட கலெக்டரிடம் மனுகொடுத்து அவர் ஆலோசித்து நுாறு சதவீதம் வழங்கப்படும் எனக் கூறினார். 117 கிராமங்களுக்கு 25 சதவீதம் இழப்பீட்டு தொகை வழங்கியுள்ளனர். ஆகையால் புதிய கலெக்டர் மீதி தொகையை வழங்க ஆவணம் செய்ய வேண்டும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE