கள்ளக்குறிச்சி : தச்சூர் ஊராட்சி பள்ளி கட்டடம் முறையான பராமரிப்பு இன்றி பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுவதால் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தின் மேற்கூரைகள் தற்போது முற்றிலும் சேதம் அடைந்தும், சுவர்கள் விரிசல்களுடன் காணப்படுகிறது.மேலும், பள்ளியின் சுவற்றில் சிமென்ட் காரை அவ்வப்போது உடைந்து கீழே விழுகிறது. மழைக் காலங்களில் பள்ளிக்குள் தண்ணீர் ஒழுகுவதால் மாணவர்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதையொட்டி ஓடுகள் உடைந்த பகுதியில் தற்காலிகமாக தார்பாய் போடப்பட்ட நிலையில், அதுவும் தற்போது கிழிந்து கந்தலாக கிடக்கிறது.விரைவில் பள்ளிகள் துவங்க நிலையில், பள்ளி கட்டடம் சீரமைக்கப்படாமல் இருப்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சமடைய செய்துள்ளது. அரசு பள்ளிகளில், நாளுக்கு நாள் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், கடந்த பல ஆண்டுகளாக பள்ளி கட்டடம் முறையான பரா மரிப்பு மற்றும் சீரமைப்பின்றி இருப்பது, பெற்றோர்களை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.எனவே, பள்ளி திறப்பதற்கு முன், கட்டடத்தினை சீரமைத்து மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பள்ளியில் குடிநீர், கழிப்பறை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளை அமைத்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE