உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா பில்லூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எடைக்கல் சப்-இன்ஸ்பெக் டர் அருட்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குட்கா பொருட் களை விற்ற பில்லூர் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மனைவி ராஜவள்ளி, 24; பாலி பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து, 42; ஆகியோரை கைது செய்தனர்.எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து அவர்களிடமிருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE