பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கொட்டித் தீர்த்தது கன மழை

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021 | கருத்துகள் (15+ 8)
Share
Advertisement
சென்னை : சென்னையில் நேற்று, 10 மணி நேரத்திற்கும் மேலாக விடாது கன மழை கொட்டித் தீர்த்தது. இதுபோல, பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்தது. இன்றும் மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. டிச.,25 முதல், மீண்டும் பருவமழை துவங்கி, டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பரவலாக பெய்துள்ளது. நேற்று,
சென்னை,கொட்டித் தீர்த்தது, கன மழை

சென்னை : சென்னையில் நேற்று, 10 மணி நேரத்திற்கும் மேலாக விடாது கன மழை கொட்டித் தீர்த்தது. இதுபோல, பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்தது. இன்றும் மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. டிச.,25 முதல், மீண்டும் பருவமழை துவங்கி, டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பரவலாக பெய்துள்ளது.

நேற்று, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் ஆர்வலர்கள் அறிவித்திருந்தனர்.ஆனால், இதற்கு மாறாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், எதிர்பாராத அளவுக்கு திடீர் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் இரவில் துவங்கிய மழை, நள்ளிரவையும் தாண்டி கொட்டியது. இந்த மழை, நேற்று மாலை வரை வெளுத்து வாங்கியது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் எழும்பூர், அண்ணாசாலை, தி.நகர், ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர், அண்ணாநகர், அடையாறு, மயிலாப்பூர், போரூர், கிண்டி என, பரவலாக இடைவிடாமல் கன மழை கொட்டியது.தாம்பரம், பல்லாவரம், தரமணி, சோழிங்கநல்லுார், திருத்தணி, செங்கல்பட்டு, பூந்தமல்லி என, சென்னையின் சுற்று வட்டாரங்களிலும் மழை கொட்டியது.


போக்குவரத்து பாதிப்புவிடாது மழை கொட்டியதால், பெரும்பாலான இடங்களில், காலை முதல் நேற்றிரவு வரை, வெள்ளம் தேங்கி நின்றது. பல இடங்களில் குடியிருப்புகளை மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.
முன் எச்சரிக்கையின்றி, திடீரென விடாது கொட்டிய மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திடீர் மழையால், சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தை சமாளிக்க முடியாமல், மாநகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி பணியாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர். வெள்ளநீரை அகற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
பல இடங்களில் ஏரிக்கரையை ஒட்டிய குடியிருப்புகள், கூவம், அடையாறு ஆற்றங்கரை குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.


ஏரிகள் திறப்புமழைநீர் வரத்து காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டது. வளிமண்டல சுழற்சி மற்றும் திடீரென மழை மேகங்கள் ஓரிடத்தில் கூடியதால், இந்த மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று பகல் வரையிலும், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், மழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இன்றும் தொடரும்இன்று முதல் மூன்று நாட்களுக்கான வானிலை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி: இன்று நண்பகல் வரை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலுார், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், கனமழையும், மற்ற கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.இன்று பகல் முதல், நாளை காலை வரையில், நீலகிரி, கடலுார், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.அனேக இடங்களில், நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில், நாளை மறுநாள் மிதமான மழை பெய்யும்.
வரும், 9ம் தேதி, தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கன மழையும்; மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்.


கொட்டிய மழை எவ்வளவு?

காலை மழை அளவு:

நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 8:30 மணி வரையில், சென்னை நுங்கம்பாக்கம், மதுராந்தகம், ஹிந்துஸ்தான் பல்கலை பகுதியில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. தரமணி, கேளம்பாக்கம், அண்ணா பல்கலை, திண்டிவனம், சென்னை விமான நிலையத்தில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
தாம்பரம், 4, மாமல்லபுரம், மணிமுத்தாறு, எண்ணுார், திருக்கழுக்குன்றம், சோழவரம், செங்குன்றம், செய்யூர், அம்பத்துார், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.மாலை மழை அளவு:

நேற்று காலை, 8:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, மீனம்பாக்கம், பூந்தமல்லியில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. தரமணி, 10; திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை, நுங்கம்பாக்கம், 9; திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, 7; பூந்தமல்லி, 6; அண்ணா பல்கலை, தாம்பரம், 5; சோழவரம், செங்குன்றம், 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜன-202117:35:23 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K மார்கழியில் மழை பெய்தால் கோடையில் கடும் வெய்யில் இருக்குமாம். அநேகமாக கோடை மழை இருக்காது.
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
06-ஜன-202113:19:00 IST Report Abuse
sridhar எப்படியோ நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தால் சரி
Rate this:
Cancel
06-ஜன-202112:44:22 IST Report Abuse
ஆரூர் ரங் சுடலயின் வருத்தமே 😎வேறு. மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீருக்கு அலைய வேண்டும்.☻ அதனை படமாக முரட்டொலியில் போட்டு🤑 ஐய்யஹோ இதுதான் அடிமை அரசின் அவலம்னு சொல்லி தேர்தலில் ஜெயிக்கலாம்னு 😑கனவு கண்டாரு. ஆனா விதி வலியது. வருண பகவான் பகல்😑😥 கனவாக்கிட்டாரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X