பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., பங்கேற்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை தொகுதி திருநாவலுார் ஒன்றியத்திற்குட்பட்ட பாதுார் , செங்குறிச்சி, திருநாவலுார் பகுதிகளில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.ஒன்றிய செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை தொகுதி திருநாவலுார் ஒன்றியத்திற்குட்பட்ட பாதுார் , செங்குறிச்சி, திருநாவலுார் பகுதிகளில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.ஒன்றிய செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செங்குறிச்சி சம்பத் ஐயர், திருநாவலூர் சம்பத்துணைத் தலைவர் சுதாகர், ஒன்றிய நிர்வாகி பழனிமலை, முன்னாள் அவைத் தலைவர் முத்துராமன், குமரகுருபரன், தேவ ராஜ், கண்ணன், பாஸ்கர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூங்கில்துறைப்பட்டுமூங்கில்துறைப்பட்டு, பொருவளூர், பொரசப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசை கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் அரசு தலைமையில் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பாண்டியன் முன்னிலையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசான ரூ.2500 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.திருக்கோவிலுார்திருக்கோவிலுர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், ஐந்து முனை சந்திப்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைவர் பழனி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் சுப்பு தலைமை தாங்கி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிவனேசன், பொது மேலாளர் செல்வம் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் இருந்தனர்.சங்கராபுரம்சேஷ சமுத்திரத்தில் சங்கராபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணமுர்த்தி தலைமை தாங்கி பொங்கல் தொகுப்பை வழங்கினார். ஒன்றிய பொருளாளர் ராஜா, வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் தாமரைச் செல்வன், முன்னாள் நகர செயலாளர் அப்துல்லா, பேரூராட்சி வார்டு செயலாளர் பாலமுருகன்,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கணேசன், அண்ணாமலை,ராஜமாணிக்கம், பூபதி, ராமசாமி,பால் சொைஸட்டி தலைவர் தங்கவேல் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X