ராமேஸ்வரம் கோயிலில் மாற்றுத்திறனாளி பக்தர்கள் அவதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயிலில் மாற்றுத்திறனாளி பக்தர்கள் அவதி

Added : ஜன 05, 2021
Share
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாற்றுத் திறனாளி பக்தர்கள் சக்கர நாற்காலி வண்டியில்தரிசனம் செய்ய வழித்தடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர் .ராமேஸ்வரம் கோயிலுக்கு நவ., முதல் ஏராளமான வெளிமாநில பக்தர்கள்தரிசனம் செய்ய வருகின்றனர்.கோயில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புக்காக கோயிலுக்குள்சிசிடிவி., கேமரா பொருத்தி, சிறப்பு கட்டண தரிசனம், பொது தரிசனம் செல்ல

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாற்றுத் திறனாளி பக்தர்கள் சக்கர நாற்காலி வண்டியில்தரிசனம் செய்ய வழித்தடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்

.ராமேஸ்வரம் கோயிலுக்கு நவ., முதல் ஏராளமான வெளிமாநில பக்தர்கள்தரிசனம் செய்ய வருகின்றனர்.கோயில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புக்காக கோயிலுக்குள்சிசிடிவி., கேமரா பொருத்தி, சிறப்பு கட்டண தரிசனம், பொது தரிசனம் செல்ல தனித் தனியாக தடுப்பை கோயில் நிர்வாகம் அமைத்துள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து வரும் பல மாற்றுத்திறனாளி பக்தர்களை, சக்கர நாற்காலி வண்டியில் அழைத்து வரும் உறவினர்கள், கோயிலுக்குள் அதற்கான வழித்தடம் இல்லாமல் 10 இடங்களில் உள்ள படிக்கட்டுகளை தாண்டி செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X