சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குதிரைச்சந்தல் - உலகங்காத்தான் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி, : குதிரைச்சந்தல் - உலகங்காத்தான் தார்சாலை கரடு முரடாக உள்ளதால் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல், தொட்டியம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குதிரைச்சந்தல், தொட்டியம், நமச்சிவாயபுரம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள்,

கள்ளக்குறிச்சி, : குதிரைச்சந்தல் - உலகங்காத்தான் தார்சாலை கரடு முரடாக உள்ளதால் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல், தொட்டியம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குதிரைச்சந்தல், தொட்டியம், நமச்சிவாயபுரம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பலர் பல்வேறு பணிகளுக்காக குதிரைச்சந்தல் - உலகங்காத்தான் கிராம சாலை வழியாக செல்கின்றனர். அப்பகுதியில் பல்வேறு இடங்களில் அரிசி ஆலைகள் உள்ளதால் நெல் மூட்டைகள், அரிசி லோடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் அதிகளவில் செல்கின்றன.

தற்போது பல்வேறு இடங்களில் சாலை குண்டும் குழியுமாகவும், ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாகவும் உள்ளன. மழைக் காலங்களில் சாலையில் குட்டைபோல் தண்ணீர் தேங்கி நிற்பதால், சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அவ்வழியாகக் செல்லும் கிராம பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கிராம மக்கள் நலன் கருதி, குதிரைச்சந்தல் - உலகங்காத்தான் சாலையில் புதிய தார்சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X