ராமநாதபுரம் : ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு ரூ.4.80 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மடம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பெண்கள்பொருளாதார மேம்பாட்டிற்காக இலவச தையல் உள்ளிட்ட தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகஉச்சிப்புளி அருகே நாகாச்சியில் அமைந்துஉள்ள ராமகிருஷ்ண மடத்தில் ஏழை மீனவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் தலைமை வகித்து செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள்8 பேர், கலை அறிவியல்கல்லுாரிகளில் படிக்கும்9 பேர், 23 பள்ளி மாணவிகள் என 40 பேருக்கு ரூ.4.80 லட்சம் மதிப்பிலான கல்வி உதவிதொகை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE