பொது செய்தி

தமிழ்நாடு

இளையோர் மன்றத்தினர்விருது பெற விண்ணப்பிக்கலாம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சமூக சேவையாற்றும் இளையோர் மன்றத்தினர், பரிசு, விருது பெற விண்ணப்பிக்கலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப்பட்ட இளையோர் மன்றங்கள் மூலமாக குடும்ப நலம், நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு, கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தல்ஆகிய சமூக சேவைகளை செய்து

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சமூக சேவையாற்றும் இளையோர் மன்றத்தினர், பரிசு, விருது பெற விண்ணப்பிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப்பட்ட இளையோர் மன்றங்கள் மூலமாக குடும்ப நலம், நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு, கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தல்ஆகிய சமூக சேவைகளை செய்து வரும் இளைஞர்,மகளிர் மன்றங்கள் 2019- -2020ல் மாவட்ட சிறந்த இளைஞர் மன்ற விருது விருதுபெற தகுதி உள்ளவையாகும். ராமநாதபுரம் பாரதிநகர் நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜன.,24க்குள் விண்ணப்பங்களை பூர்த்திசெய்து வழங்க வேண்டும். தேர்வாகும் இளையோர் மன்றத்திற்கு ரூ.25ஆயிரம் ரொக்கபரிசு, சான்றிதழ் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வானால் ரூ.1 லட்சம், தேசிய அளவில் தேர்வானால் முதல் பரிசு ரூ.5 லட்சம், 2வது ரூ.3 லட்சம், மூன்றாவது ரூ.2 லட்சம் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு 95855 35722 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட இளையோர் அலுவலர் நோமான் அக்ரம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X