சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோர்ட் பணிக்கு போலி நியமன ஆணை கடலுாரில் மோசடி நபர்கள் இருவர் கைது

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் கோர்ட் பணிக்கு போலி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி, புதுநகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் சத்தியதாஸ், 26; பெயின்டர். இவர், கடலுார் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ்விடம் புகார் மனு அளித்தார். கடலுார் அடுத்த செல்லங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன்

கடலுார் : கடலுாரில் கோர்ட் பணிக்கு போலி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி, புதுநகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் சத்தியதாஸ், 26; பெயின்டர். இவர், கடலுார் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ்விடம் புகார் மனு அளித்தார். கடலுார் அடுத்த செல்லங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சத்யராஜ். இவர் நெல்லிக்குப்பம், பெரிய சோழவல்லி கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு வரும் போது பழக்கம் ஏற்பட்டது.தனக்கு நீதிபதிகளிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. தற்போது 'ஓபன் கால்பரில்' நீதிமன்ற பணிகளுக்கு ஆள் எடுக்கப்படுகிறது. பணம் கொடுத்தால் வேலை வாங்கி விடலாம் என கூறினார்.

இதனை நம்பி பல தவணைகளில் 6 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தேன். அதன்படி பரங்கிப்பேட்டை கோர்ட்டில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கினார். பின்னர் ஊட்டி கோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனக்கூறி ஊட்டிக்கு அழைத்துச் சென்றார்.அங்கு ஓட்டலில் அறை எடுத்து தங்கி பின்னர் சிதம்பரம் கோர்ட்டுக்கே பணியிட மாற்றம் வாங்கி விட்டதாக என்னிடம் கூறினார்.இதனால் எனக்கு சத்யராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் என்னிடம் கொடுத்தது போலியான பணி நியமன ஆணை என தெரியவந்தது.

அதனால் பணத்தைத் திரும்பக் கேட்டேன். அதற்கு என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். எனவே, சத்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்திருந்தார். எஸ்.பி., உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் துர்கா மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிந்து, சத்யராஜ், 30; அவருக்கு உடந்தையாக இருந்த கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் செந்தில்குமார், 43; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X