கடலுார் : சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கார் டிரைவருக்கு கடலுார் 'போக்சோ' சிறப்பு கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் விஜயகுமார், 26; கார் டிரைவர். இவர், கடலுாருக்கு உறவினர் வீட்டிற்கு வந்து சென்ற போது, 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி, சிறுமிக்கு வயிற்று வலி எனக் கூறி கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையறிந்த விஜயகுமார், அங்கு சென்று, சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, விஜயகுமாரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, கடலுார் 'போக்சோ' சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.
அரசு வழக்கறிஞர் கலைச்செல்வி ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, விஜயகுமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE