கோவை, 'டிரீம் லைட்ஸ் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் சார்பில், மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி சரவணம்பட்டி, 'ஏஸ்ட்ரோ செயற்கை புல்வெளி' தளத்தில் நடந்தது.14, 16 வயதுக்கு உட்பட்ட என, இரண்டு பிரிவுகளில், 'நாக்- அவுட்' முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், கண்ணுார் எப்.சி., ஸ்போர்டிங் அணி முதலிடத்தையும், கோவை பி.வி.பி., இரண்டாமிடத்தையும் பிடித்தது.16 வயதுக்கு உட்பட்ட பிரிவில், கண்ணுார் எப்.சி., ஸ்போர்டிங் அணி முதலிடத்தையும், ஸ்பார்டாக்கர்ஸ் எப்.சி., அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.டேக்வாண்டோ போட்டிகோவை வீரர்கள் அசத்தல்தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் மற்றும் சேலம் மாவட்ட டேக்வாண்டோ அசோசியேஷன் இணைந்து, மாநில அளவில் ஆன்லைன் வாயிலாக டேக்வாண்டோ 'பூம்சே' போட்டி, கடந்த வாரம் நடந்தது. வீரர், வீராங்கனைகளுக்கான சப்-ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் என, நான்கு பிரிவுகளில், 600க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இதில், கோயம்புத்துார் மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில், 70க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.போட்டியின் முடிவில் அதிக பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.பாக்ஸ் கிரிக்கெட்சி.சி.சி., அணி வெற்றிகோவை, 'டிரீம் லைட்ஸ் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் சார்பில், மாவட்ட அளவிலான பாக்ஸ் கிரிக்கெட் போட்டி, சரவணம்பட்டி பகுதியில் நடந்தது. ஓபன் பிரிவில் நடந்த போட்டியில், 16 அணிகள் பங்கேற்றன.போட்டியின் முடிவில், சி.சி.சி., அணி முதலிடத்தையும், ரெட் பேக்ஸ் அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன.மாவட்ட கேரம் போட்டிகணேசன் முதலிடம்ஸ்ரீராமகிருஷ்ணா கேரம் பயிற்சி மையம் சார்பில், மாவட்ட அளவிலான கேரம் போட்டி, ராமநாதபுரம், எஸ்.என்., மஹாலில் நடந்தது. 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ஆண்களுக்கான பிரிவில் கணேசன், அகர்சன், மூர்த்தி; பெண்கள் பிரிவில் சுபர்னா, சுநேத்ரா, பவித்ரா ஆகியார் முதல், மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.மில் ஊழியர்களுக்கான கபடிஅரசூர் அணி சாம்பியன்கோவை கே.பி.ஆர்., நிறுவனம் மற்றும் கே.பி.ஆர்., கல்லுாரியின் விளையாட்டு துறை சார்பில், 8வது பழனிச்சாமி கவுண்டர் செல்லம்மாள் நினைவு கோப்பை, பெண்களுக்கான கபடி போட்டிகள், அரசூர் கே.பி.ஆர்., மில் வளாகத்தில் நடந்தன. இதில், எட்டு அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில், அரசூர் மில் அணி முதலிடம், குவாண்டம்- 3 அணி இரண்டாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE