பொது செய்தி

தமிழ்நாடு

ஹெலிகாப்டரில் நகர் வலம்!

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக, கொரோனா காலத்தில் பணியாற்றிய இ.எஸ்.ஐ.,மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்கள் 24 பேரை, துடியலுார் அருகே கங்கா நர்ஸிங் கல்லுாரியில் இருந்து ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று, கோவையின் முக்கிய இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டன. மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக அனைவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.சிறப்பு

கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக, கொரோனா காலத்தில் பணியாற்றிய இ.எஸ்.ஐ.,மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்கள் 24 பேரை, துடியலுார் அருகே கங்கா நர்ஸிங் கல்லுாரியில் இருந்து ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று, கோவையின் முக்கிய இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டன. மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக அனைவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.சிறப்பு வார்டில் சிகிச்சைகோவை: கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு, சிகிச்சை அளிப்பதற்கென, சிறப்பு புற நோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதில் கொரோனாவில், குணமடைந்தவர்களில் சிலருக்கு மூச்சு திணறல், உடல் வலி, உடல் சோர்வு, வயிற்று கோளாறுகள், துாக்கமின்மை, மன உளைச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. நெஞ்சக பிரிவு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். தினமும் 10க்கும் மேற்பட்ட நோயாளிகள், சிகிச்சை பெற்று செல்வதாக மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்தார்.தடுப்பூசிக்கான குளிர்பதன பெட்டி!கோவை: கொரோனா தடுப்பூசிகளை பதப்படுத்துவதற்காக, 64 குளிர்பதன பெட்டிகள் கோவைக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. இதில், 99 லிட்டர் மருந்துகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்க முடியும். இந்த 64 பெட்டிகளில் கோவைக்கு 24, ஈரோடு 15, திருப்பூர் 16, நீலகிரிக்கு 9 என பிரித்துள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.எர்ணாகுளத்துக்கு ரயில் கோவை: எர்ணாகுளத்தில் இருந்து வரும், 8ம் தேதி முதல் தினமும் காலை, 9:10 மணிக்கு புறப்படும் ரயில்(02678) பாலக்காடு, கோவை, சேலம் வழியாக இரவு, 7:50க்கு பெங்களூரு அடைகிறது. பெங்களூருவில் இருந்து வரும், 9ம் தேதி முதல் தினமும் காலை, 6:10க்கு புறப்படும் ரயில்(02677) மாலை, 4:55க்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. இத்துடன், ஏ.சி.,சேர் கார் ஒன்று, இரண்டாம் வகுப்பு சேர் கார்கள் எட்டு, இரண்டாம் வகுப்பு பொதுப்பிரிவு பெட்டிகள் ஒன்பதும் இணைக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும், இந்த ரயிலுக்கான, முன்பதிவு நடந்து வருவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.சத்தி ரோட்டில் மறியல்சரவணம்பட்டி: விசுவாசபுரத்தில், நேற்று ரோடு மறியல் நடந்தது. இங்கு, ஒன்று முதல் 7 வீதிகளில் சூயஸ் குடிநீர் வழங்கும் திட்டத்துக்காக, பைப் பதிக்கும் பணி நடந்தது. பணி முடிந்ததும், ரோடு சீரமைக்கப்படவில்லை. பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். 30 பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர், சத்திரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். சரவணம்பட்டி போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக, பேச்சு நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். மறியலால், சத்தி ரோட்டில் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உண்டு, உறைவிட பயிற்சிகோவை: மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் 120 பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இரு ஆண்டுகள், தொழிற்கல்வி சார்ந்த பயிற்சிகள் வழங்க, கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக சிலபஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு எளிமையாக கற்பிக்கும் வகையில், ஆசிரியர்களுக்கான பயிற்சி, கிணத்துக்கடவு அக்சயா கல்லுாரியில் நடக்கிறது. வரும் 8ம் தேதி வரை நடக்கும், உண்டு, உறைவிட பயிற்சியில், மாநிலம் முழுக்க, 239 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.பெ.தி.க., நிர்வாகிக்கு தொற்று!கோவை: தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன்,70. இவருக்கு, கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. கொரோனா பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X