தொண்டாமுத்துார்:பரமேஸ்வரன்பாளையத்தை சேர்ந்த மெக்கானிக் சந்திரகுமார், 34. மனைவி பிருந்தா மற்றும் குடும்பத்தினர், திருப்பூர் சென்றுள்ளார். சந்திரகுமார் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் சந்திரகுமாரின் நண்பர், வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. அழைத்தும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த நண்பர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சந்திரகுமார் உறங்கிய நிலையில் இருந்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது, உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அளவுக்கு அதிகமாக குடித்ததால் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE