பொது செய்தி

தமிழ்நாடு

'மதிநிறை மார்கழி' இசை நாட்டிய விழா :கோவை மணிமகாலில் மூன்று நாள் நடக்கிறது

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் குருகுலம் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் மற்றும் மணிமகால் சார்பில், 'மதிநிறை மார்கழி' என்ற இசை நாட்டிய விழா நடக்கிறது.வரும் 8ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை, மாலை 5:00 மணிக்கு நடக்கும் இந்நிகழ்ச்சியில், இசை வடிவமான இறைவனுக்கு, இமைப்பள்ளி மாணவிகள் தங்களின் இசையை காணிக்கையாக்க உள்ளனர். பீளமேடு ஹோப் காலேஜ் அருகில் உள்ள மணிமகாலில் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5:30

கோவை:கோவையில் குருகுலம் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் மற்றும் மணிமகால் சார்பில், 'மதிநிறை மார்கழி' என்ற இசை நாட்டிய விழா நடக்கிறது.வரும் 8ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை, மாலை 5:00 மணிக்கு நடக்கும் இந்நிகழ்ச்சியில், இசை வடிவமான இறைவனுக்கு, இமைப்பள்ளி மாணவிகள் தங்களின் இசையை காணிக்கையாக்க உள்ளனர். பீளமேடு ஹோப் காலேஜ் அருகில் உள்ள மணிமகாலில் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு முதல் நிகழ்ச்சியாக, வீணை இசை கலைஞர் வசந்தாவின் வீணை இசை நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு ஸ்ரீநாட்டிய நிகேதன் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 7:00 மணிக்கு, கோவை சங்கராபரணம் இசைப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டியமும் நடக்க உள்ளது. 9ம் தேதி மாலை 5:00 மணிக்கு, திருப்பூர் பகவதி இசைப்பள்ளியை சேர்ந்த சிவசங்கரியின் இசை நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு பாரதி சுந்தராஜன் மற்றும் பூரணா சுந்தராஜன் ஆகியோரின் பரதநாட்டியமும், 6:30 மணிக்கு கரூர் நடனாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவர்களின் பரதநாட்டியமும், 7:00 மணிக்கு பெரியாழ்வார் திருமகள் நாட்டியமும் நடக்கிறது. 10ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, கீர்த்தனாவின், தியாகராஜர் ராமாயணம் பரதநாட்டியம், மாலை 6:00 மணிக்கு கோவை சிவாலயா டான்ஸ் அகாடமி மாணவர்களின் பரதநாட்டியம், மாலை 6:30 மணிக்கு, சிவாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின், பரத நாட்டியமும், மாலை, 7:00 மணிக்கு, பொள்ளாச்சி பாரதகலா பாடசாலை மாணவர்களின் அர்த்தநாரீஸ்வரர் நாட்டிய நாடகமும் நடக்கிறது.நடன ஆசிரியர்கள் விதுஷி மிருதுளாராய், சுபாசிணி, ஜெகதீஸ்வரி, ரேவதி, மீனா, வனிதா, வல்சா ஆகியோர் இசை நாட்டிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கின்றனர்.மார்கழி என்றாலே, அது இறைவனுக்கு உகந்த மாதம். இறைவனை பிரார்த்தனை செய்யும் விதமாக, மாணவர்களின் இந்த இசை நாட்டிய நிகழ்ச்சியை சமர்ப்பிக்கிறோம். அனுமதி இலவசம்; அனைவரும் பங்கேற்கலாம்.- மயிலிறகு சுந்தராஜன்,நிகழ்ச்சி அமைப்பாளர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X