பயங்கரவாதத்தை எதிர்ப்போம் ; ஐ.நா.,வில் இந்தியா உறுதி

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நியூயார்க்:''பயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும்,'' என, ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் திருமூர்த்தி கூறினார்.ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், இரண்டு ஆண்டு காலத்துக்கு தற்காலிக உறுப்பினராக இந்தியா, நார்வே, கென்யா, அயர்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகள் சமீபத்தில்

நியூயார்க்:''பயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும்,'' என, ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் திருமூர்த்தி கூறினார்.



latest tamil news




ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், இரண்டு ஆண்டு காலத்துக்கு தற்காலிக உறுப்பினராக இந்தியா, நார்வே, கென்யா, அயர்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகள் சமீபத்தில் பொறுப்பேற்றன. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையில், இந்த ஐந்து நாடுகளின் கொடிகளை நிறுவும் நிகழ்ச்சி நடந்தது.


latest tamil news



இதில், ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் திருமூர்த்தி பேசியதாவது:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், எட்டாவது முறையாக, இந்தியா தற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்று உள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, மனித உரிமைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உணவு, உடை, வழிபாடு உட்பட அனைத்திலும் வேற்றுமைஇருந்தாலும், அதில் ஒற்றுமை, அமைதி, வளர்ச்சியை, இந்தியா ஏற்படுத்தி வருகிறது.


latest tamil news



உலக அமைதி மற்றும் பாதுகாப்பில், மனிதநேயத்துடன் இந்தியா பணியாற்றி வருகிறது. உலகத்தை ஒரு குடும்பமாக நினைப்பது தான், இந்தியாவின் பண்பு, கலாசாரம். மனிதநேயத்துக்கு விரோதமான பயங்கரவாதம் போன்ற செயல்களுக்கு எதிராக, இந்தியா எப்போதும் வலிமையாக குரல் கொடுத்து வருகிறது; தொடர்ந்து கொடுக்கும். கொரோனாவுக்கு எதிராக போராட, உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த ஒற்றுமை, அனைத்து விஷயங்களிலும் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


ஐ.நா.,வில் வரவேற்பு


இந்தியா உட்பட ஐந்து நாடுகள், பாதுகாப்பு கவுன்சிலில், தற்காலிக உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளதை, ஐ.நா., உறுப்பு நாடுகள் வரவேற்றுள்ளன .ஐ.நா.,வின், 75வது பொதுச் சபை கூட்டத்தின் தலைவர் வோல்கன் போஸ்கிர், ''பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள், இரண்டு ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்ற, அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்,'' என, கூறியுள்ளார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க துாதர் கெல்லி கிராப்ட் கூறுகையில், ''உலகில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்த, புதிய உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற, அமெரிக்கா தயாராக உள்ளது,'' என்றார். பிரிட்டன், சீனா உட்பட பல நாடுகளின் ஐ.நா., துாதர்களும், வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
06-ஜன-202103:19:00 IST Report Abuse
John Shiva   U.K இந்தியாவில் இப்ப நடப்பது பயங்கவாத ஆட்சி .விவசாயிகள் போராட்டத்தை நீர்த்துப்போக எதிர் போராட்டத்தை தொடங்க பிஜேபி முயட்சி செய்கிறது.அறுபதுக்கு மேலாண விவசாயிகள் இறந்தும் இந்த ஆட்சிக்கு மனிதாபிமானம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X