திருப்பூர்:தபால்துறை சார்ந்த சேவைகளை மத்திய அரசின், 'உமாங்' மொபைல் செயலி மூலமாகவும் பெறலாம் என தபால் துறை அறிவித்துள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதார்கள் தங்கள் பி.எப்., விவரங்களை சரிபார்க்கவும், அதில் மாற்றங்கள் செய்யவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு அலைய வேண்டியிருக்கும் சிரமத்தை குறைப்பதற்காக மத்திய அரசு தரப்பில், உமாங் (UMANG) என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.இந்த செயலில் அமர்ந்த இடத்தில் இருந்தே, பி.எப்., பணம் எடுத்துக்கொள்ளலாம். பான், ஆதார், டிஜிலாக்கர், எரிவாயு முன்பதிவு, மொபைல் பில் செலுத்துதல், மின்சார கட்டணம் செலுத்துதல், போன்ற பலவகை பயன்பாடுகளையும் மேற்கொள்ளலாம்.அரசாங்க சேவைகளை மொபைலிலேயே வழங்க கூடிய இந்த செயலி பல லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்படுகிறது.தற்போது தபால்துறை சார்ந்த சேவைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. தபால் பின்கோடுகள் அறிந்து கொள்ளவும், சேமிப்பு, காப்பீடு திட்டங்கள் சார்ந்த விவரங்கள் மற்றும் சேவைகள் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.தபால் துறை வாடிக்கையாளர்கள் இதனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் எளிதில் பயன்பெறலாம் என தபால் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE