சென்னை:'நீட்' தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு வழக்கில், கைது செய்யப்பட்டு உள்ள பல் டாக்டரிடம், 10 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரி, போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துஉள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் பாலசந்திரன், 48; பல் டாக்டர். இவர், நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு வழக்கில்,சென்னை பெரியமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரது மகள் தீக் ஷா, 18; இடைத்தரகர் ஜெயராம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்த மோசடி தொடர்பாக, பாலசந்திரனை, 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE