பொது செய்தி

தமிழ்நாடு

'ஆறு'தலை கொண்டவனே... ஆறுதலை அளிப்பவனே!

Added : ஜன 05, 2021
Share
Advertisement
தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை; மனமுருகும் முருக பக்தர்கள் சண்முகசுந்தரம்,திருக்கார்த்திகை தீபத்திருவிழா அன்னம்பாலிப்பு குழுதமிழர்களின் முக்கிய பண்டியாக உள்ளது தைப்பூசம். பாதயாத்திரை சென்று பழநி முருகனை வழிபடுவது, முக்கிய விரதமாக பல நுாறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவ்வளவு புண்ணியம் நிறைந்த நாளுக்கு, விடுமுறை அளிக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக கோரிக்கை

தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை; மனமுருகும் முருக பக்தர்கள்

சண்முகசுந்தரம்,திருக்கார்த்திகை தீபத்திருவிழா அன்னம்பாலிப்பு குழுதமிழர்களின் முக்கிய பண்டியாக உள்ளது தைப்பூசம். பாதயாத்திரை சென்று பழநி முருகனை வழிபடுவது, முக்கிய விரதமாக பல நுாறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவ்வளவு புண்ணியம் நிறைந்த நாளுக்கு, விடுமுறை அளிக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தோம். தமிழக முதல்வர், தைப்பூச திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவித்ததால், முருக பக்தர்கள், இந்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாடுவர்.
ராஜா முத்துரத்தினம்பழநி பாதயாத்திரை குழு ஒருங்கிணைப்பாளர்தைப்பூச திருவிழாவுக்கு அரசு விடுமுறை என்ற அறிவிப்பு, கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கும்பலால் ஏற்பட்ட மன வருத்தத்தை போக்கியுள்ளது. விடுமுறை கிடைத்துள்ளதால், பக்தர்கள் பாதயாத்திரை சென்று முருகனை வழிபட உதவியாக இருக்கும். தமிழக முதல்வர் அறிவித்துள்ள அரசு விடுமுறை அறிவிப்பு, முருக பக்தர் மனதில் புதிய உற்சாகத்தையும், ஆன்மிக எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கார்த்திகேய சிவம்அர்ச்சகர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில்அருள்மழை பொழியும் முருகப்பெருமானை, எப்பொழுதும் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
தைப்பூச திருவிழாவுக்கு விடுமுறை கிடைக்கவில்லையே என, கோவிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. பக்தர்கள், குடும்பத்துடன் சென்று, தைப்பூச விழாவில் முருகனை வழிபட்டு, 'குருவாய் வருவாய்... அருள்வாய் குகனே...' என்று துதித்து அருளானந்தம் பெறலாம்.சுப்பிரமணியம்கருவம்பாளையம், திருப்பூர்.'விழி கிடைக்குமா...அபய கரம் கிடைக்குமா?' என்று, கடந்த சில மாதங்களாக, கொரோனாவில் மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்து மதத்தின் மீது பல்வேறு தாக்குதல் நடந்த நிலையில், சரியான நடவடிக்கை இல்லையெனவும், தமிழகத்திலுள்ள இந்துக்கள் வேதனையில் இந்தனர்.
தைப்பூச அரசு விடுமுறை அறிவிப்பு, உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்கு புதிய எழுச்சி ஊட்டுவது போல் அமைந்துள்ளதுராஜி வேணுகோபால்புது நகர், திருப்பூர்.கவலை மறைந்து, மனதில் மகிழ்ச்சி பெருக வேண்டுமெனில், முருகனை தான் அதிகம் வழிபடுகிறோம். சஷ்டி விரதம் இருந்து, முருகனை வழிபடும் பெண்களுக்கு, வேண்டிய வரம் கிடைக்கும். தைப்பூச திருவிழாவுக்கு, விடுமுறை இல்லாதது இதுவரை பெரிய ஏமாற்றமாக இருந்தது. இனிமேல், அனைத்து இந்து மக்களும், தைப்பூச திருநாள் விழாவை, சுப்ரமண்ய கடவுள் கோவில்களில் மிகழ்ச்சியுடன் கொண்டாடுவர்.கவிதாபூச்சக்காடு, திருப்பூர்குடும்பத்தில் கவலை மறைந்து, செல்வம், புகழ், மன அமைதி கிடைக்க கந்தப்பெருமானை வழிபடுகிறோம். தைப்பூச திருவிழாவுக்கு விடுமுறை இல்லாததால், காவடி எடுத்து பாதயாத்திரை செல்ல முடியாத நிலை இருந்தது. தமிழக முதல்வர், தைப்பூச திருவிழாவுக்கு அரசு விடுமுறை என்று அறிவித்துள்ளது, முருக பக்தர்களற் வயிற்றில் பால் வார்த்தது போல் உணர்கிறோம்.
தமிழகத்தில், ஆன்மிக எழுச்சியை கண்டிப்பாக உருவாக்கும்.நந்தினி துரைசாமிகந்த சஷ்டி வழிபாடு குழு, பழக்குடோன்.'கால்நடையார் வரும் மானிட ஜாதியை கண்டு களித்திருப்பான்' என்று பழம் பாடல்களில் கூறுவதை போல், பாதயாத்திரை சென்று முருகனை வழிபடுவதால், கந்தப்பெருமானின் கருணையை பெறலாம் என்கின்றனர். விடுமுறை இல்லாததால், குடும்பத்துடன் தைப்பூச விழாவில் பங்கேற்க இயலாத நிலை இருந்தது. தமிழக அரசு, பொதுவிடுமுறை அறிவித்துள்ளதால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X