அவிநாசி;அவிநாசியில், அ.தி.மு.க., நிகழ்ச்சி தொடர்பாக வைக்கப்பட்ட 'பேனரில்' தனது பெயர் இல்லாததால், அதனை சேதப்படுத்திய, கிளை நிர்வாகி மீது, போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது.அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது.அவரை வரவேற்று, பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் இயக்குனர்கள் சார்பில், 'பிளக்ஸ் பேனர்' வைக்கப்பட்டிருந்தது.அதில், தனது பெயர் இல்லாததால், பழங்கரை ஊராட்சி துணை தலைவர் நடராஜன், பேனரில் இருந்த முதல்வர்,துணை முதல்வரின் படத்தை கிழித்து விட்டதாக, கூட்டுறவு சங்க தலைவர் தனபால், அவிநாசி போலீசில் புகார் கொடுத்தார்.இது குறித்து, தனபால் கூறுகையில், ''பிளக்ஸ் பேனரை அப்புறப்படுத்தியதோடு, முதல்வர், துணை முதல்வர் படம், பெயரை கிழித்துள்ளனர். இதற்கு காரணமான, ஊராட்சி துணை தலைவர் நடராஜன், ரமேஷ், ரங்கன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.கடந்த மாதம், முன்னாள் முதல்வர்எம்.ஜி.ஆர்., நினைவு நாளின் போதும், இதே நடராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணியத்திடம் வாக்குவாதம் செய்தததால், உட்கட்சி பூசல் வீதிக்கு வந்தது, குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE