கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எம்.பி., - எம்.எல்.ஏ., வழக்குகள்: , விரைந்து முடிக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
சென்னை:முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை, விரைந்து முடிக்க வசதியாக, ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.விசாரணைமுன்னாள், இந்நாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது, விசாரணையை கண்காணிப்பது தொடர்பாக, அனைத்து உயர்

சென்னை:முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை, விரைந்து முடிக்க வசதியாக, ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விசாரணை

முன்னாள், இந்நாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது, விசாரணையை கண்காணிப்பது தொடர்பாக, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றமே, வழக்கை விசாரணைக்கு எடுத்து, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து விசாரிக்க வேண்டும் என, கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள அவதுாறு வழக்குகளையும் விரைந்து விசாரித்து முடிக்க, நடவடிக்கை எடுத்திருந்தது.இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சார்பில், வழக்கறிஞர் விஜய் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீதிமன்றத்தில், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு பதில், மண்டல அளவில் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தலாம். சென்னையில் ஏற்படுத்தப்பட்ட கூடுதல் சிறப்பு நீதிமன்றத்துக்கு, ஐந்து மாதங்களாக நீதிபதி இல்லை,'' என்றார்.

இதையடுத்து, 'மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளில், தாமதமின்றி விசாரணையை முடிக்க வேண்டும். அரசியல் கட்சிகளில் பாகுபாடு காட்டக் கூடாது. உயர் நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்கும்' என, தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.


உத்தரவு



பதிவாளர் ஜெனரல் அறிக்கை, நீதிமன்ற உத்தரவு, ஆவணங்களின் நகல்களை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அட்வகேட் ஜெனரலுக்கு வழங்கும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. தாமதமின்றி விசாரணையை முடிக்க வசதியாக, ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுப்பதாக தெரிவித்த முதல் பெஞ்ச், விசாரணையை, வரும், 11ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X