பொது செய்தி

தமிழ்நாடு

நாவலுார் - -தாழம்பூர் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருப்போரூர் : தாழம்பூர் -- நாவலுார் சாலையை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.சென்னையை ஒட்டி, நாவலுார் அருகே, தாழம்பூர், சிறுசேரி, காரணை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியினர் வசதிக்காக, நாவலுாரில் இருந்து தாழம்பூர் வழியாக செல்ல, ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது.இதையடுத்து, ஏராளமான தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள்,

திருப்போரூர் : தாழம்பூர் -- நாவலுார் சாலையை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னையை ஒட்டி, நாவலுார் அருகே, தாழம்பூர், சிறுசேரி, காரணை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியினர் வசதிக்காக, நாவலுாரில் இருந்து தாழம்பூர் வழியாக செல்ல, ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது.இதையடுத்து, ஏராளமான தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு மனைகள், மால்களுடன் தியேட்டர்கள் வந்தன. மேலும், பொறியியல், மருத்துவக் கல்லுாரிகள், பள்ளிகள் ஆகியவை உள்ளன.இப்பகுதி வளர்ந்து வருவதால், இவ்வழியாக தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

குறுகிய அளவில், ஒருவழி சாலையாக இருப்பதால், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு, குண்டும், குழியுமாகவும் காணப்படுகிறது. வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு, எதிரெதிர் வாகனங்கள் உரசி, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.நெடுஞ்சாலைத் துறையினர், சாலையை முறையாக பராமரிக்காததாலும், அகலப்படுத்தாததாலும், விபத்து ஏற்படுகிறது.எனவே, நாவலுார் - -தாழம்பூர் சாலையை சீரமைத்து அகலப்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X