கரசங்காலில் செத்து மிதந்த மீன்கள்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : கரசங்கால் கிராம குளத்தில், ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.குன்றத்துார் ஒன்றியம், கரசங்கால் ஊராட்சியில், 50 சென்ட் நிலப்பரப்பில், 'கர்மார்' குளம் உள்ளது.இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இடமாகவும் உள்ளது. இந்நிலையில், இந்த குளத்து நீரில், ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இது குறித்து,

ஸ்ரீபெரும்புதுார் : கரசங்கால் கிராம குளத்தில், ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.குன்றத்துார் ஒன்றியம், கரசங்கால் ஊராட்சியில், 50 சென்ட் நிலப்பரப்பில், 'கர்மார்' குளம் உள்ளது.

இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இடமாகவும் உள்ளது. இந்நிலையில், இந்த குளத்து நீரில், ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:இந்த குளத்தில், எப்போதும் தண்ணீர் நிரம்பியே இருக்கும். இதனால், குளத்தில் அதிக அளவு மீன்கள் காணப்பட்டன.

இரு நாட்கள், மீன்கள் செத்து மிதக்கின்றன.ஊராட்சி நிர்வாகம் சார்பில், மீன்கள் அகற்றப்பட்டாலும், இந்நீரையே கால்நடைகள் குடிக்கும் நிலை உள்ளது.எனவே, குளத்து நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என, அதிகாரிகள் ஆய்வு செய்து, குளத்து நீரை துாய்மையாக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

குன்றத்துார் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், 'குளத்தில் இறந்து கிடந்த மீன்களை அகற்றி, பள்ளம் தோண்டி புதைத்துவிட்டோம். குளத்து நீரை, தர பரிசோதனைக்கு அனுப்ப உள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X