வெள்ளாடு மடி நோய் தடுப்பு குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி மைய தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் சி.சவுந்திரராஜன் கூறியதாவது:பால் உற்பத்தி செய்யும் வெள்ளாடுகளில், மடி நோய் வரும். இது, பால் சுரப்பு திசுக்களில் உருவாகும் ஒரு வித அழற்சி. குறிப்பாக, தலைச்சேரி ஆடுகளை அதிகம் பாதிக்கும்.
நுண்ணுயிரிகள் தாக்குவதால், காம்புகள் வீங்கிய நிலையில், சிவப்பு நிறமாக மாறி, சூடாக இருக்கும். மேலும், பால் மடியை, உரிமையாளரை கூட தொடவிடாது. நோய் தாக்கிய ஆட்டின் பால், பழுப்பு நிறம் மற்றும் ரத்தமாக வரும். இதைத் தடுக்க, அடிக்கடி பால் கறந்து கீழே விட வேண்டும். சாக்பீஸ், சோற்றுக்கற்றாழை, மஞ்சள், எலுமிச்சை சாறு கலந்து, காம்புகள் மீது தடவ வேண்டும்.கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி, நோய் எதிர்ப்பு மருந்துகள் ஊசி வழியாகவோ அல்லது மாத்திரை வழியாகவோ கொடுக்கலாம்.மேலும், மம்மாடியம் என்ற பவுடரை தண்ணீரில் கலந்து உருண்டைகளாக்கி, ஐந்து நாட்கள் வாய்வழியாக கொடுத்தால் சரியாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 95005 63853
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE