குன்னுார்:நீலகிரியில் உள்ள சோதனை சாவடியில், நேற்று முதல் கொரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் பர்லியார், கோத்தகிரி குஞ்சப்பனை, கூடலுார் கக்கனல்லா, நாடுகாணி, பாட்டவயல், தாளூர் ஆகிய சோதனை சாவடிகளில், ஜூன், 3ம் தேதி முதல், சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். தினமும், 200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சோதனை சாவடிகளில்,பரிசோதனை நிறுத்தப்பட்டது. இங்கு பணியில் ஈடுபட்டிருந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திரும்பினர். குன்னுார் வட்டார மருத்துவ அலுவலர் ஹாஜிரா பேகம் கூறுகையில், ''சோதனை சாவடிகளில், பரிசோதனை நிறுத்தப்பட்டது. இனி ஆரம்ப சுகாதார நிலையம் மூலம், அந்தந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கு பரிசோதனை செய்யப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE