காங்ரேஜ் மற்றும் கிர் ரக கலப்பின மாடுகளில், கூடுதலாக வருவாய் ஈட்டுவது குறித்து, ஆற்காடு குப்பம், பங்களாதோட்டம் பகுதியைச்சேர்ந்த கால்நடை விவசாயி கே.சீனிவாசன் கூறியதாவது:நான், காங்ரேஜ் மற்றும் கிர் ரக மாடுகளை வளர்த்து வருகிறேன். இந்த இரு ரக மாடுகளில், கலப்பின கன்று குட்டிகளை இனப்பெருக்கம் செய்துள்ளேன்.இந்த ரக கறவை மாடு, துவக்கத்தில், 5 லிட்டர் மற்றும் சினைக்கு வந்த பின், 3 லிட்டர் பால் கறக்கும். 1 லிட்டர் பால், 95 ரூபாய் வரை விற்கப்படுகிறது.மாடுகளுக்கு, தீவனம் மற்றும் பராமரிப்பு செலவு போக, ஆண்டுக்கு கணிசமான வருவாய் ஈட்ட வழிவகுக்கும்.பிற ரக மாடுகளாக இருந்தாலும், நாட்டு மாடுகளாக இருந்தாலும், மாடுகள் வளர்வதற்கு ஏற்ப சூழ்நிலை உருவாக்க வேண்டும். அப்போது தான், மாடு வளர்ப்பு தொழிலில், லாபகரமான வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 88384 69756
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE