'வம்பன் - -4' ரக பாசிப்பயறு சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியை முனைவர் காயத்ரி சுப்பையா கூறியதாவது:தமிழ்நாடு வேளாண் பல்கலை மூலமாக, 2019ல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ரகம், வம்பன்- - 4 பாசிப்பயறு. இது, 70 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஆடி, புரட்டாசி, மார்கழி, தை மற்றும் சித்திரை பட்டங்களில் பயிரிடலாம். மஞ்சள் தேமல், சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு திறன் மற்றும் இலைசுருள் நோய்க்கு அதிக எதிர்ப்பு திறனும் உடையதாக இருக்கிறது.ஒரு ஏக்கருக்கு, 410 கிலோ மகசூல் கொடுக்கும். இது, வம்பன்- - 3 ரகத்தில், 350 கிலோ மற்றும் கோ - -8 ரகத்தில், 338 கிலோவைவிட, 16.8 சதவீதம் மற்றும் 21.3 சதவீதம், கூடுதல் மகசூல் தரக்கூடியது.காரீப், ராபி, கோடை பருவங்களில் கூடுதல் மகசூல் கொடுக்க கூடியது. வம்பன் - -4 ரகம், பல முறை பூ பூக்கும் தன்மை உடையது. காய்களில் இருந்து, விதையும் எளிதில் உதிராது.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 94420 91883
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE