நேந்திரம் வாழை பழ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பொறியியல் பட்டதாரி, இயற்கை பண்ணை விவசாயி எம்.பாரதி கூறியதாவது:சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தி, பல ரக பழ வகைகளை சாகுபடி செய்து வருகிறேன். இதன் மூலமாக, ஆண்டுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.குறிப்பாக, 'பர்ரி' ரக பேரீச்சை பழச்செடி இடைவெளியில், ஊடு பயிராக பல வித ரக வாழைப்பழங்களை பயிறுடுகிறேன்.இதில், கேரளா மாநிலத்தில் விளையும் நேந்திரம் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் விளையும் ஏலக்கி உள்ளிட்ட பல வித வாழையை சாகுபடி செய்துள்ளேன். நம் மண்ணுக்கு, அருமையாக வளர்க்கின்றன.பேரீச்சை வருவாய் கிடைக்கும் வரை, வாழை கை கொடுக்கிறது. மேலும், ஒரே இடத்தில், இரட்டிப்பு வருவாய் கிடைக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 93805 33376
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE