திருப்பூர்:தேர்தல் கமிஷன், 'பெல்' நிறுவனத்திடம் கொள்முதல் செய்யும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, குறிப்பிட்ட காலம் கடந்ததும் திரும்ப ஒப்படைத்துவிடுகிறது. அதன்படி, 2006க்கு முன் உருவாக்கிய இயந்திரங்களை, திரும்ப ஒப்படைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.நல்லுார் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், 1,260 பழைய இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, அவை விரைவில் திரும்பி அனுப்பப்பட உள்ளன. இந்நிலையில், கலெக்டர் விஜயகார்த்திகேயன், நல்லுார் மண்டல அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,'காலாவதியான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை திருப்பி அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. நல்லுாரில் உள்ள, பழைய இயந்திரம், ஒரு வாரத்துக்குள், சென்னையில் உள்ள 'பெல்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE