1,260 ஓட்டுப்பதிவு இயந்திரம்: ஒப்படைக்க அவசர உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,260 ஓட்டுப்பதிவு இயந்திரம்: ஒப்படைக்க அவசர உத்தரவு

Added : ஜன 05, 2021
Share
திருப்பூர்:தேர்தல் கமிஷன், 'பெல்' நிறுவனத்திடம் கொள்முதல் செய்யும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, குறிப்பிட்ட காலம் கடந்ததும் திரும்ப ஒப்படைத்துவிடுகிறது. அதன்படி, 2006க்கு முன் உருவாக்கிய இயந்திரங்களை, திரும்ப ஒப்படைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.நல்லுார் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், 1,260 பழைய இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன்

திருப்பூர்:தேர்தல் கமிஷன், 'பெல்' நிறுவனத்திடம் கொள்முதல் செய்யும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, குறிப்பிட்ட காலம் கடந்ததும் திரும்ப ஒப்படைத்துவிடுகிறது. அதன்படி, 2006க்கு முன் உருவாக்கிய இயந்திரங்களை, திரும்ப ஒப்படைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.நல்லுார் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், 1,260 பழைய இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, அவை விரைவில் திரும்பி அனுப்பப்பட உள்ளன. இந்நிலையில், கலெக்டர் விஜயகார்த்திகேயன், நல்லுார் மண்டல அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,'காலாவதியான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை திருப்பி அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. நல்லுாரில் உள்ள, பழைய இயந்திரம், ஒரு வாரத்துக்குள், சென்னையில் உள்ள 'பெல்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X